மனிதன் எப்படிச் சிந்திக்கிறானோ? அது போல் சிந்திக்கக் கூடிய இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் சிறு சிறு அளவில் இதன் முன்னேற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட சாட்-ஜிபிடி (Chat-GPT, Generative Pre-Trained Transformer) என்ற செயற்கை நுண்ணறிவால் பதில் அளிக்கும் செயலி வந்தவுடன் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
எங்கு பார்த்தாலும் இதன் பேச்சு தான் இருக்கிறது. எல்லோருக்கும் வேலை போய்விடும் என்று விவாதிக்கும் அளவிற்கு இதன் தாக்கம் இருக்கிறது. இந்த நேரத்தில் இந்தத் துறையைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள ஒரு கையேடு அனைவருக்கும் அவசியம். அந்த எண்ணத்தில் செயற்கை நுண்ணறிவு எப்படி வேலை செய்கிறது. அதன் முடிவுகளுக்கும், தரவுகளும் அதற்குக் கொடுக்கப்படும் கோட்பாடுகளும் எவ்வளவு முக்கியம். எந்தெந்த துறையில் இது கோலோச்சும். இதை நண்பனாக மாற்றிக் கொள்வது எப்படி?
இன்றைய அன்றாட வாழ்க்கையில் நமக்குத் தெரியாமல் இந்தத் துறை நமக்கு எப்படிப் பயன்படுகிறது என்று பல கோணங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை அலசுவது தான் இந்த நூல். இந்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ள இந்த நூல் முதல் படி தான். நமது புரிதல் அதிகரிக்கும் பொழுது மேலும் விரிவான தகவல்களுடன் இந்தத் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மனித குலம் இருக்கும் என்றால் அது மிகையல்ல.
Reviews
There are no reviews yet.