இப்புத்தகம் 19 கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒரு தகவலை அழுத்தமாகச்
சொல்கிறது. முதல் கட்டுரை எளிமையான வாசிப்புடன் துவங்குகிறது. அடுத்தடுத்த
கட்டுரைகள் நம்மை அசையவிடாமல், அசாதாரணமான தகவல்களை அநாயஸ்யமாகச்
சொல்லிச் செல்கிறது. வாசிப்புக்கு இலகுவான மொழிப் பிரயோகம் என்பதால் எவரும்
கைபிடித்துச் செல்ல வேண்டியதில்லை. சிக்கலான அறிவியல் கருத்துக்கள், ஆராய்ச்சிக்
கண்டுபிடிப்புகளை அறிவியலில் பின்னணி இல்லாத என்னைப் போன்ற வாசகர்களும்
அணுகக்கூடிய மொழியில் சொல்லியிருந்தார் நூலாசிரியர்.
வாசிக்கத் தெரிந்த அனைவரும் இந்த நூலுக்கான வாசகர்கள். நூலை வாசித்து முடித்த பின்னர்
நிறைய அறிவியல் தகவல்கள் நம்முள் அசைபோடுகின்றன. வாசிப்புக்கு மட்டுமல்ல,
வாழ்க்கைக்கான விஷயங்களையும் சில கட்டுரைகள் போதிக்கின்றன. இந்த நூலை பள்ளி,
கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம். மாணவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள
ஏதுவாகும்.
Reviews
There are no reviews yet.