மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாகச் செல்லத் தொடங்கியதிலிருந்து உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்கிறோம். உலகை நம் கைக்குள் கொண்டு வருவதில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரம்ப நாட்களில், போக்குவரத்து தண்ணீருடன் தொடங்கியது, சாலைகள் என நீண்டது. பின்னர் இருப்புப் பாதையில் அமைக்கப்பட்ட தொடர்வண்டி என்று முன்னேறியது. தரையைத் தொடாமல் காற்றில் நகரும் வான்வழிப் போக்குவரத்து இவை அனைத்தையும் விட வேகமாகப் பயணிக்க உதவியது. நீங்கள் பூமியில் இருந்தால், அடுத்த கிரகத்திற்கு பயணம் செய்யும் எண்ணத்தை எவ்வாறு  எதிர்பார்க்க முடியும் முடியும்? அதைத் தொடர்ந்து, விண்வெளிப் பயணத்திற்கான போக்குவரத்து உருவானது. இந்த ஐந்து போக்குவரத்து முறைகளின் பின்னால் உள்ள அறிவியலை இந்த புத்தகம் ஆராய்கிறது.